×

பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு :தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி

சென்னை: 10,11,12ம் வகுப்புப் பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. முதல் கட்டமாக அதிக கண்காணிப்பு தேவைப்படும் தேர்வு மையங்கள் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. அந்த மையங்களில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். ஏற்கனவே 3000 தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இது மேலும் 100 மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து தேர்வு மையங்களும் முழு அளவில் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதே போன்று பறக்கும் படையினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வின் போது கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவற்றை தடுக்கவே இது போன்ற நடவடிக்கையில் பள்ளிக்கலவித்துறை இறங்கியுள்ளது. தேர்வு மையங்களுக்குள் தனியார் பாலி ஆசிரியர்களுக்கு இனி அனுமதி கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCTV ,School Education Action , CCTV Camera, Public Exams, School Education
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...