அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா ? : தமிழ் மாநில காங்கிரஸ் மறுப்பு

சென்னை : அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை தமிழ் மாநில காங்கிரஸ் மறுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுடனான கூட்டணியும் உறுதியாகி 7 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்திற்கு சென்று தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் விடியல் சேகர் சந்தித்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதனை மறுத்து விடியல் சேகர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூட்டணிக் குறித்து பேசும் அதிகாரம் ஜிகே வாசனுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார். கூட்டணி பற்றி பேச தமது அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து தாம் பேச்சு நடத்தியதாக வெளியான செய்தி உண்மை அல்ல என்றும் விடியல் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: