குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த 2 யானைகள் விரட்டியடிப்பு

வேலூர்: குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் ஊருக்குள் புகுந்த 2 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 2 யானைகள் மோர்தானா அணைக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின. அப்போது ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.

இதேபோல், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்திலும் யானைகள் புகுந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ‘யானைகள் நடமாட்டம் காரணமாக கடும் அச்சத்தில் உள்ளோம். எனவே யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: