ஆற்றுகால் பொங்கல் விழா சிறப்பு ஏற்பாடு : நாகர்கோவில் வரும் அனந்தபுரி, பரசுராம் இன்று அனைத்து நிலையங்களிலும் நிற்கும்

நாகர்கோவில்: ஆற்றுகால் பொங்கல் விழாவையொட்டி இன்று நாகர்கோவில் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு அனைத்து நிலையங்களிலும் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ஆற்றுகால் பொங்கல் விழாவையொட்டி இன்று 20ம் தேதி நாகர்கோவில் நோக்கி இயக்கப்படும் ரயில்கள் 2, 3 வது பிளாட்பாரங்களில் இருந்து புறப்படும். கொல்லம் நோக்கி செல்லும் ரயில்கள் 1, 4 மற்றும் 5 வது பிளாட்பாரங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

20ம் தேதி ரயில் எண் 56317 கொச்சுவேளிநாகர்கோவில் பயணிகள் ரயில் கொச்சுவேளியில் இருந்து 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும். ரயில் எண் 56315 திருவனந்தபுரம்  நாகர்கோவில் பயணிகள் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 2 மணி நேரம் 10 நிமிடங்கள் முன்னதாக மாலை 3 மணிக்கு புறப்படும். ஒரு பயணிகள் சிறப்பு ரயில் கொச்சுவேளியில் இருந்து மாலை 4.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும். இந்த ரயில் 56315 திருவனந்தபுரம்  நாகர்கோவில் பயணிகள் ரயில் நேரத்தில் செல்லும்.

16127 சென்னை எழும்பூர்  குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாறசாலையில் நின்று செல்லும். ரயில் எண் 16382 கன்னியாகுமரி  மும்பை சிஎஸ்எம்டி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயில் பாலராமபுரம் மற்றும் நேமம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 16724 கொல்லம்  சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம்  நாகர்கோவில் ஜங்ஷன் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். 16649 மங்களூர்  நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம்  நாகர்கோவில் ஜங்ஷன் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.பக்தர்கள் ரயில் நிலை பகுதிகளில் பொங்கல் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

அதனை போன்று ரயில் நிலைய வளாக பகுதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யக்கூடாது. ரயில் நிலைய லிப்ட்கள் மற்றும் எஸ்கலேட்டர் ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே ரயில் நிலையத்தில் வந்து ரயிலில் தங்கள் இருக்கையை உறுதி செய்துகொள்ளலாம். பொங்கல் முடிந்த பின்னர் இரண்டாவது நுழைவு வாயில் மற்றும் பவர் ஹவுஸ் சாலை ஆகியன ஒரு வழிப்பாதையாக செயல்படும். பக்தர்கள் பாதுகாப்பு உதவி எண் 182 மற்றும் 99950 40000, பெண்கள் உதவி எண் 95678 69385 மற்றும் பயணிகள் உதவி எண் 138 ஆகியவற்றை உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: