லாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது

மொனாக்கோ: இந்தியாவை சேர்ந்த யுவா என்று அமைப்பிற்கு லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் ஜார்கண்டில் கால்பந்து வீராங்கணைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கும் யுவா அமைப்பிற்கு விளையாட்டிற்கான நல்லெண்ண விருது வழங்கப்பட்டது. அந்த அமைப்பால் அடையாளம் காட்டப்பட்ட ஹேமா, நீத்தா, ராதா, கோனிகா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், அணிகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு உயரிய விருதான லாரெஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் சிறந்த வீரருக்கான விருதை டென்னிஸ் நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தட்டிச் சென்றார். சிறந்த வீராங்கனை விருது அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பில்ஸுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர்வுட்ஸ் பெற்றுள்ளார். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதினை தட்டிச் சென்றது. அதேபோன்று, திருப்பு முனையை ஏற்படுத்தியவருக்கான விருது, ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: