வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி துவக்கம்

வேதாரண்யம்:  தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தி தூத்துக்குடிக்கு  டுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் வேதாரண்யம் உள்ளது.  உப்பு உற்பத்தியில்  ஆண்டு  ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு 30ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாததால்  லாரிகள்  மூலமாகவே அனுப்படுகிறது. அகஸ்தியன்பள்ளியிலிருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில்பாதை திட்ட பணி தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்று  வருகிறது.  

இங்கு 3 மாதங்களுக்கு வீசிய கஜா புயலால் கடலிலிருந்து தள்ளப்பட்ட சேறு உப்பள பகுதியில் புகுந்து மூன்றடி வரை சேறு நிரம்பி காணப்பட்டது.  இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். தற்சமயம் மத்திய அரசின் உப்பு இலக்காக அதிகாரிகள் கொண்ட குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.  

அவர்களிடமிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீத பணிகளே நடந்துள்ளது.  ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி செய்கிறார்கள். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாதம்காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: