பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க கோரி மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: அற்புதம்மாள் அறிவிப்பு

சென்னை: தமது மகன் உட்பட 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஊர் ஊராக மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், புதுச்சேரி ஆகிய நகரங்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடைபெறும் எனக் கூறினார். இதுவரை, 15 மாவட்ட மக்களை சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து முறையிட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடாதா என்று ஏங்குகிறேன் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க தற்போது சென்னைக்கு வருகை தந்துள்ளதாகவும், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க முதல்வரிடம் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் கூறினார். மேலும் 9ம் தேதி நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள், வணிகர் சங்கம், விசாயிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், திரை துறையினர் அனைவரையும் சந்திக்க போவதாக கூறினார். விடுதலை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞர்கள், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தந்தாக கூறினார். அதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்துவதாகவும், தனது மகன் விடுதலைக்காக போராடும் தமக்கு துணை நிற்பதாகவும் கூறியிருந்தார். மேலும் பலதரப்பட்ட மக்கள் ஆதரவு தரும் பட்சத்தில், ஆளுநர் 7 பேரின் விடுதலை தொடர்பாக யோசித்து உனடனடியாக தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: