இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கு வரிச்சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் தொழில் தொடங்கவும் முதலீடு செய்யவும் பல்வேறு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோருக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியிருப்பது புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தொழில்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன்மூலம் புதிய நிறுவனங்கள் வர்த்தகத்தை 25 கோடி ரூபாயில் இருந்து 100 கோடி ரூபாய் வரை உயர்த்தக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய நிறுவனங்களுக்கான முதலீடு வரம்பு 10 கோடி ரூபாய் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போலி நிறுவனங்கள் வளர்வதைத் தடுக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தொழில் நிறுவனங்கள் அளிக்க வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: