அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை: அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடையிற்று வருவதாக கூறப்படுகிறது. தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளிவரும் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: