நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா கீழ சிந்தாமணியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்துரை (35). விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 6-5-2018 அன்று இரவு நம்பியாற்றில் மணல் கடத்தப்படுவதை தடுக்க ஏட்டு ஜெகதீஸ்துரை சென்றார். அவரை பார்த்ததும் தப்பிய கும்பலை பைக்கில் விரட்டிச் சென்றார். வழியில் டிராக்டரில் இருந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கடப்பாரையால் குத்தியும் கொலை செய்தனர். இதுதொடர்பாக விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிந்து நாங்குநேரி தாமரைகுளத்தை சேர்ந்த முருகன் (25), கிருஷ்ணன் (48),  முருகபெருமாள் (18),  மணிக்குமார் (24),  ராஜாரவி (25), அமிதாப்பச்சன் (29) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் விசாரித்து, முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாபச்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், முருகபெருமாளை விடுதலை செய்தும் நேற்று தீர்ப்பளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: