தனித்து நிற்காமல் திமுக-அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி: பாமக வெற்றி பெற்றது எப்போது?

சென்னை: திமுக-அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக பல முறை படுதோல்வியை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிமுகவை கடுமையாக எதிர்த்து வந்த பாமக, 1998ம் ஆண்டு அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, பாஜக, சுப்பிரமணியசுவாமியின் ஜனதா, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், வேலூர், வந்தவாசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. மயிலாடுதுறையில் தோல்வியை தழுவியது.

அதேபோல, 2009ம் ஆண்டு மீண்டும் அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் பாமக போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் மதிமுக, 2 கம்யூனிஸ்ட்களும் இடம்பெற்றிருந்தனர். அதில் பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், பெரும்புதூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுவை ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 7 தொகுதியிலும் பாமக தோல்வியை தழுவியது. இதையொட்டி ஒப்பந்தபடி ஒரு ராஜ்யசபா சீட்டை தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். பாமகவின் படுதோல்வியை அடுத்து ஒப்பந்தபடி ராஜ்யசபா சீட் தர ஜெயலலிதா மறுத்துவிட்டார். அதேநேரத்தில், திமுகவுடன் 1999ம் ஆண்டு பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அப்போது அக்கட்சிக்கு தர்மபுரி, சிதம்பரம், வேலூர், வந்தவாசி, மயிலாடுதுறை, ராசிபுரம், செங்கல்பட்டு, புதுவை ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 5 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், செங்கல்பட்டு, வந்தவாசி, புதுவை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 6 தொகுதியிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதை விட திமுக கூட்டணியில்தான் பாமக போட்டியிட்ட இடங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: