முதல்வர் முன்னிலையில் பரபரப்பு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

செனனை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேற்று காலை முதல் மாலை வரை பாமக மற்றும் பாஜ கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகம் வந்தார். அங்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் அங்கு இருந்தார். மாலை 6.45 மணி அளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்ட்டு, ஸ்டிரெக்சர் உதவியுடன் அமைச்சரை, 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அமைச்சரை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக ரத்த அழுத்தம் (பிபி) காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் முன்னிலையில் சக அமைச்சர் ஒருவர் மயங்கி விழுந்தது தலைமை செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: