மக்களை பற்றி கவலையில்லாமல் கூட்டணி அதிமுக ஊழல்களை புத்தகம் போட்டவர் ராமதாஸ்: ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆம்பூர்: அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ். இன்று பாமக - அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கரடிக்குப்பம் என 2 இடங்களில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அகரம்சேரியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ேபசியதாவது: 2006ம் ஆண்டு ₹7 ஆயிரம் கோடி விவசாய கடனை ஒரே கையெழுத்தில் ரத்து செய்து உத்தரவிட்டவர் கலைஞர். இன்று  200க்கும் ேமற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்லிக்கு சென்று விவசாயிகள் போராடினர். பிச்சை எடுப்பது, அரை நிர்வாணம், முழு நிர்வாண போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மோடியோ முதல்வரோ வரவில்லை. ஆனால் இப்போது மோடி, விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படும் என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி ₹2 ஆயிரம் வழங்கப்படும் என கூறுகிறார். எல்லாம் ஒரு நாடகம். இப்போது நான் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதை கூட, இப்போதுதான் கிராமங்கள் தெரிந்ததா என்று எடப்பாடி கேட்கிறார். அதோடு புதிதாக முதல்வர் கனவில் அரசியலுக்கு வந்துள்ள ஒருவர், அவரை பார்த்து காப்பி அடிப்பதாக சொல்கிறார். கிராமசபை கூட்டம் என்பது சோழர்கள் ஆட்சிக்கு பிறகு கலைஞர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளிக்கிறேன். நீங்கள் கொடுத்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறுகிறேன்’’ என்றார்.

பின்னர் ஆம்பூர் அடுத்த சோலூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இப்போதுகாலையில்ஒருசெய்திவந்திருக்கிறது. பா.ம.கவோடுஅ.தி.மு.க கூட்டணியாம். இதே ராமதாசும், அன்புமணியும் என்னென்ன பேச்சு பேசியிருக்கிறார்கள். நம்மையும் சேர்த்துதான் பேசியிருக்கிறார்கள். அதுவேறு. .தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்டபோது என்னநிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். சிலபேருக்கு புரியவில்லை. 7 தொகுதி என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது. இன்னொன்று எது என்றால் ராஜ்யசபா. ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பிக்கு சமம். இப்பொழுதும் 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பாருங்கள்.  

இதே ராமதாஸ், சமீபத்தில் அ.தி.மு.கவை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கைவிட்டுவிட்டோ போகவில்லை. புத்தகமே போட்டிருக்கிறார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘கழகத்தின்கதை’. அந்தப்புத்தகத்தை போட்ட பெரியமனுஷன்தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்து கொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான்கேட்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் ஒருபதவி தேவைதானா? 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்யசபா சீட் மட்டுமல்ல. அதற்குப் பின்னாலும் இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது.

கழகத்தின்கதை என்கிற புத்தகத்தில், எடப்பாடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பற்றியும் அவர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய சொத்து என்ன, அமைச்சர்களின் வண்டவாளங்கள்என்ன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார் ராமதாஸ். இன்றைக்கு கூட்டு சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களைப்பற்றி, நாட்டைப்பற்றி எந்தவித  கவலையும் படாமல் பணத்தைப்பற்றி கவலைப்பட்டு இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இந்தநிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க ஒன்றுசேர்ந்திருக்கிறது. நம்முடைய திமுக கூட்டணி நேரத்திற்காக அல்ல, சூழ்நிலைகளுக்காக அல்ல, நாட்டுமக்களின் பிரச்னைகளை, குறைகளை தீர்த்துவைப்பதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: