×

6 பேர் டக் அவுட் வெறும் 24 ரன்னில் சுருண்டது ஒமான்

ஒமான் அணியுடன் அல் அமரத் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாசில் வென்ற ஸ்காட்லாந்து முதலில்  பந்துவீசியது. ஒமான் தொடக்க வீரர்கள் ஜதிந்தர் சிங், பண்டாரி இருவரும் டக் அவுட்டாகி  வெளியேறினர். அடுத்து வந்த கவார் அலி அதிகபட்சமாக 15 ரன் எடுக்க (33 பந்து, 1 பவுண்டரி), மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். ஒமான் அணி 17.1 ஓவரில் 24 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாது. 6 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஸ்காட்லாந்து பந்துவீச்சில் ருவாய்த்ரி ஸ்மித், அட்ரியன் நீல் தலா 4, அலஸ்டேர் எவன்ஸ் 2 விக்கெட்  வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 3.2 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து எளிதாக வென்றது. கிராஸ் 10, கேப்டன் கோயட்சர் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 280 பந்துகள்  எஞ்சியிருக்க, வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oman , First ODI, Doug Out, Scotland, Oman
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி