×

முதல் ஒருநாள் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து மோதல்

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30க்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் ஒருநாள் தொடரில்  மோதுகின்றன. உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.முதல் ஒருநாள் போட்டி பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கேல் இடம் பெற்றிருப்பது, உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தும், சொந்த மண்ணில் வெற்றியை குவிக்க வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால் போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, டேரன் பிராவோ, கிறிஸ் கேல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், நிகோலஸ் பூரன்,  ரோவ்மன் பாவெல், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ். இங்கிலாந்து: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், லயம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென்  ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,West Indies ,England , First ODI, West Indies, England
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது