×

ஐபிஎல் டி20 அட்டவணை அறிவிப்பு: மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகல தொடக்கம்....சூப்பர் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 2019ம் ஆண்டு சீசன் மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்  விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டித் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன்  சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 8 அணிகள்  பங்கேற்கின்றன.
2019 சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் 2 வாரத்துக்கான போட்டிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டத்தில் மொத்தம் 17 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மார்ச் 23ம் தேதி  நடைபெற உள்ள தொடக்க போட்டியில் சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், போட்டிகளுக்கான தேதியில் மாற்றம்  செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் 2 வார அட்டவணை

மார்ச் 23    சென்னை-பெங்களூரு    சென்னை
மார்ச் 24    கொல்கத்தா-ஐதராபாத்    கொல்கத்தா
மார்ச் 24    மும்பை-டெல்லி    மும்பை
மார்ச் 25    ராஜஸ்தான்-பஞ்சாப்    ஜெய்பூர்
மார்ச் 26    டெல்லி-சென்னை    டெல்லி
மார்ச் 27    கொல்கத்தா-பஞ்சாப்    கொல்கத்தா
மார்ச் 28    பெங்களூரு-மும்பை    பெங்களூரு
மார்ச் 29    ஐதராபாத்-ராஜஸ்தான்    ஐதராபாத்
மார்ச் 30    பஞ்சாப்-மும்பை    மொகாலி
மார்ச் 30    டெல்லி-கொல்கத்தா    டெல்லி
மார்ச் 31    ஐதராபாத்-பெங்களூரு    ஐதராபாத்
மார்ச் 31    சென்னை-ராஜஸ்தான்    சென்னை
ஏப்ரல் 1    பஞ்சாப்-டெல்லி    மொகாலி
ஏப்ரல் 2    ராஜஸ்தான்-பெங்களூரு    ஜெய்பூர்
ஏப்ரல் 3    மும்பை-சென்னை    மும்பை
ஏப்ரல் 4    டெல்லி-ஐதராபாத்    டெல்லி
ஏப்ரல் 5    பெங்களூரு-கொல்கத்தா    பெங்களூரு



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,schedule announcement ,Kolakalla ,Chennai ,Super Kings , IPL T20 Schedule, Chennai, Super Kings - RCB
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?