புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கூகுளில் டிஷ்யூ பேப்பரை தேடினால் பாக். கொடி

புதுடெல்லி: கூகுளில் சிறந்த கழிவறை பேப்பர் என்று தேடினால் பாகிஸ்தான் நாட்டின் கொடி வருவது போல் மாற்றப்பட்டுள்ளது.  காஷ்மீரில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.  புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் அது தொடர்பான பல்வேறு சமூக வலைதள செய்திகள் உலாவந்தபடி இருந்தது. இந்நிலையில் கூகுளில் “சிறந்த டிஷ்யூ பேப்பர்” என்று தேடினால் பாகிஸ்தான் கொடி வருவது குறித்த செய்திகள் வருகின்றன.

அதேபோல் புகைப்படத்தை தேடினால் பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலான பாகிஸ்தான் கொடி மற்றும் கழிவறை பேப்பர் வருவது போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது டிரண்ட் ஆகி வருகின்றது. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், மூலமாக இதுபோன்று செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  ஆனால், இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.  கூகுளின் இதுபோன்று புகைப்படங்கள் வரும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது புகைப்படங்கள் சர்ச்சைகுரிய வார்த்தைகளுடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: