எனி டெஸ்க் செயலி மூலமாக வங்கி கணக்கில் பணம் திருட்டு

மும்பை: மொபைல் போனில் ரிமோட் அக்சஸ் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் நாராயண் ஹெக்டே. இவர் சிண்டிகேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இ வாலட் பயன்பாட்டாளர். இதனை தனது புதிய மொபைலில் பதிவிறக்கம் செய்ய அவருக்கு உதவி தேவைப்பட்டுள்ளது. இதனால் மொபைல் வாலட்  உதவி எண்ணில் தேடியபோது “எனி டெஸ்க்” என்ற ஆப்பை பதவிறக்கம் செய்து கொள்ளும்படி காட்டியுள்ளது. இதனையடுத்து அவர் தனது செல்போனில் எனி டெஸ்க்’ ஆப்பை டவுன்லோடு செய்துள்ளார். அப்போது அந்த செயலி போனில் சில தகவல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிகளை கேட்டுள்ளது. நாராயணும் அதற்கு சரி என்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ1 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வங்கியை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுள்ளார். அப்போது, யூபிஐ எனப்படும் செயலியின் வங்கி பணபரிமாற்ற சேவை மூலமாக  பணம் மாற்றப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உஷாரான நாராயண் மேற்கொண்டு பணபரிவர்த்தனை செய்ய இயலாதபடி தடுத்துள்ளார். செயலியை பயன்படுத்தி 5 பரிவர்த்தனைகள் மூலமாக ரூ1.24 லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இரண்டு பரிவர்த்தனைகளிலேயே நாராயணன் இதனை கண்டறிந்து தடுத்துள்ளார். எனினும் அவரது ரூ1 லட்சம் பறிபோனது. “எனி டெஸ்க்” செயலியானது போன் மூலமாக மற்ற மொபைல் அல்லது கணிணியை இருந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் செயலியாகும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து யூபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்பிஐ அனுப்பிய சுற்றறிக்கையில், எனி டெஸ்க் செயலியை பயன்படுத்தும்போது அதில் தரப்படும் அனுமதியை கொண்டு அந்த மொபைலை கட்டுப்பாட்டில் எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக எடுத்துவிட வாய்ப்புள்ளது. அதிகரித்து வரும் டிஜிட்டல் பணபரிமாற்றத்தில் இதுபோன்ற மோசடி செயலிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: