சென்னையில் தனியார் உணவக உரிமையாளர் கைது: ரூ.7.5 கோடி மோசடி செய்ததாக புகார்!

சென்னை: சென்னை நம்ம உணவகம் உரிமையாளர் முகமது காசிம் என்பவரை 7.5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர், நம்ம உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தார். இதில் பல கோடி கணக்கில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்துள்ளனர். அருண் வெங்கடராமன் என்ற பைனான்சியரிடம் இருந்து 9 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு 7.5 கோடி மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நம்ம உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் உருவாக்கப்பட்டு, அதில் பலரை பங்குதாரர்களாகவும் சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்த உணவகம் வடபழனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றும், இந்த உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகள் சென்னையில் உள்ள மற்ற கிளையில் ஆரம்பிக்கப்படும் நம்ம உணவகத்திற்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆசை வார்த்தைகளை கூறி பலரை இதில் பங்குதாரர்களாக ஈடுபட செய்துள்ளனர். இதையடுத்து சென்னையில் நம்ம உணவகம் கிளைகள் ஆரம்பிக்க 100க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் பங்குதாரர்களுடன் ஒப்பந்தம் செய்து பல மாதங்கள் ஆகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதலீடு செய்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்டோரிடம் பணம் வணங்கி சுமார் ரூ.42 கோடி மோசடி செய்ததாக வெவ்வேறு மத்திய குற்ற பிரிவுகளில் புகார் கொடுக்கப்பட்டது. அதேபோல வடபழனியில் தலைமை இடம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட 9 கோடி ரூபாயையும் திருப்பி கொடுக்காததால் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது நம்ம உணவகம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: