2019 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்

மும்பை: 2019-ம் ஆண்டின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான லீக் சுற்றின் முதல் 2 வாரத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரின் போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டது. இதில் மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: