×

புதிய வனச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரியில் முழு அடைப்பு போராட்டம்

நீலகிரி : நீலகிரியில் புதிய வன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதியில் கடந்த 1969ம் ஆண்டு ஜென்ம ஒழிப்பு சட்டத்தின் கீழ் 98 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டது. அதில் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போது வரை எந்த தீர்வும் செய்யப்படாமல் பரிவு 17 என்ற சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதில் தோட்டங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் என 30 அயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வனமாக மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலங்களை பிரிவு 58 என்ற சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு அதற்கான விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு கடந்த மாதம் தீர்மானமாக கொண்டு வந்து பிரிவு 16ஏ என்ற சட்டத்தின் அடிப்படையில் பிரிவு 17 நிலங்களில் உள்ள அனைத்து நிலங்களையும் உடனடியாக வனமாக மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வர கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை கண்டித்து 2000க்கும் மேற்பட்ட கடைகளை மூடி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் வாகங்களும் இயங்காததால் கூடலூர் பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிரிவு 17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : blockade fight ,cancellation ,Nilgiris , New Forest Law, Nilgiri, Full blockade struggle
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்