ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் போது லாரி மோதியதில் 13 பேர் பலி: 15 பேர் படுகாயம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் 13 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்நகர் -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்கோது மணமகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

Advertising
Advertising

மணமகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: