×

திருச்சி மத்திய சிறையில் கைதிகளே நடத்தும் தையலகம் துவக்கம் : குறைந்த விலையில் துணி தைக்க பொதுமக்கள் அணுகலாம்

திருச்சி:  திருச்சி மத்திய சிறையில் சிறை தையலகத்தை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் நேற்று துவக்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் துணிகள் தைத்து தரப்படுவதாக டிஐஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. சென்னையில் புழல் 1 மற்றும் புழல் 2 என 2 சிறைகளும் மற்றும் திருச்சி, கடலூர், கோயமுத்தூர், மதுரை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர் உள்பட  9 சிறைககள் ஆகும். இதில் திருச்சி மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,400க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 400 பேர் ஆயுள்தண்டனை கைதிகள் ஆவர்.

சிறையில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் வெளியில் சென்றால் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழும் வகையில் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.  மேலும் கைதிகளுக்கு சுயதொழிலாக மெழுகுதிரி, பிஸ்கட், மரவேலைகள், கட்டிட வேலைகள், கம்ப்யூட்டர் மற்றும் படிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வருடம், 7வருடம் மற்றும் ஆயுள் தண்டனை பெற்று வரும் கைதிகள், 6 மாதம், 1 வருடம் என தண்டனைக்கு ஏற்ப கைதிகளுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் கைதிகள் பேக்கரி மற்றும் இனிப்பு காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வகையில் சிறை அங்காடியும் துவங்கப்பட்டது.  

தற்போது திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தைக்கும் சிறை தையலகம் நேற்று துவங்கப்பட்டது. சிறை அங்காடியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தையலகத்தை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இந்த தையலகத்தில் 2 கைதிகள் பணியில் உள்ளனர். இதுகுறித்து டிஐஜி சண்முகசுந்தரம் கூறுகையில், திருச்சி மத்திய சிறையில் 1400 கைதிகள் உள்ளனர். இவர்களில் 400 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவார்கள். சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளில் 60 பேர் உணவகம் மற்றும் பேக்கரி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் கைதிகளுக்கு மனமாற்றம் ஏற்பட்டு தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்காக நம்பிக்கை ஏற்படும். தற்போது 2 கைதிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் அதிகரிக்கப்படும். சிறை தையலகத்தில் குறைந்த விலையில் துணிகள் தைத்து தரப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் காவலர்களுக்கான சீருடைகளும் தைத்து தரப்படும் என்றார். சிறை சூப்பிரண்டு முருகேசன், சிறை அங்காடி சூப்பிரண்டு திருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Opening ,prisoners ,Central Jail ,Tiruchi , Trichy, Central Prison, Prisoners
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்