டெல்லி நரேலாவில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் திடீர் தீவிபத்து

டெல்லி: டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து 12 தீயணைப்பு வானங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று அதிகாலை டெல்லியின் நரேலா இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் ஒரு ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீ விபத்து பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் தீ விபத்துகளில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்தோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. சமீபத்திய வாரங்களில் தலைநகர் டெல்லியில் பல பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

குறிப்பாக கடந்த வாரம் கரோல் பாக் ஹோட்டலில் நடந்த கோர தீ விபத்தால் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் விதிகளை மீறி ஹோட்டல் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஹோட்டலின் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த தீ விபத்திற்கு பிறகு, தீயணைப்பு துறையினர் நடத்திய சோதனையில், டெல்லியில் சுமார் 28 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கரோல் பாக் பகுதியில் உள்ள 145 ஹோட்டல்களில், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக 105 ஹோட்டல்களின் லைசென்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது ஷூ தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: