ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பொருட்களை உடனடியாக புளோரிடா ஆய்வக சோதனைக்கு அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பொருட்களை புளோரிடா ஆய்வக சோதனைக்கு உடனடியாக அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனவும் சிவகளை, பரம்பு ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட இரு பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் இந்த உத்தரவை அளித்தனர். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வு நடைபெறுகிறது என்றுன் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுக்கு எத்தனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எத்தனை பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் வினவினர். இந்தியாவில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்குகின்றன, மத்திய, மாநில தொல்லியல் துறையில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளது என மத்திய தொல்லியல் துறை இயக்குனர் பிப்ரவரி 25-ம் தேதி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: