உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி..... பாமகவுக்கு 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாமகவுக்கு 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகள்  என்னென்ன என்பது பின்னர் அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 கோரிக்கைகளை அதிமுகவுக்கு பாமக முன்வைத்துள்ளது. அவை

* காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

* கோதாவரி உள்ளிட்ட முக்கிய 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

* ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

* தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

* தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

* மணல் குவாரிகளை மூட வேண்டும்.

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தேவை.

* மேகதாதுவில் கர்நாடகம் அணை காட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

* கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: