பேரணாம்பட்டு வனச்சரகத்தில் விலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

பேரணாம்பட்டு:  பேரணாம்பட்டு வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டது. பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட பல்லலகுப்பம், குண்டலப்பள்ளி, கமலாபுரம், மோர்தானா, சாரங்கல் ஆகிய காப்பு காடுகள் உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. இதை தடுக்கவும், அவற்றின் தாகம் தீர்க்கும் வகையிலும் வனச்சரக பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

தற்போது வெயில் தொடங்கி உள்ள நிலையில், மாவட்ட வனப்பாதுகாவலர் சேவாசிங், மாவட்ட வன அலுவலர்  பாரகவ் தேஜஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் சுமார் இரண்டரை அடி ஆழம் உள்ள 30க்கும் மேற்பட்ட சிமென்ட் தொட்டிகளில் ரேஞ்சர் சங்கரய்யா, வனவர்கள் ஹரி, வேல்முருகன் உட்பட வன ஊழியர்கள் நேற்று டிராக்டர்கள் மூலம் குடிநீரை நிரப்பினர். இதன் மூலம் வனவிலங்குகள் தாகம் தீர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: