மக்களவை தேர்தல் 2019: அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளன. பாமக - அதிமுக கூட்டணி குறித்து அரசல்புரசலாக செய்திகள் வெளியான நிலையில், பாமக தரப்பில் அதனை மறுத்தே வந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ஆகியோர் முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிமுக - பாமக தரப்பில் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை இதுவாகும். கடந்த 2011-ல் அதிமுக ஆட்சியமைத்தது முதலே, அக்கட்சியையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக தலைமை தற்போது கூட்டணி அமைக்க பேசிவருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக-வை தவிர்த்து, பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று கூறப்படுகிறது.

பாமகவுக்கு 6 தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் உள்ளிட்டவை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: