நீதிபதிகள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குரலில் மிமிக்ரி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிர்ச்சி

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குரலில் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பேசிய மர்மநபர் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி டி.பி.ராதாகிருஷ்ணன், கர்நாடக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எல்.நாராயணசாமி ஆகியோரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தன்னை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் மூத்த வழக்கறிஞர்கள் சிலரை பரிந்துரைக்குமாறும் மர்மநபர் கேட்டிருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் உயர்நீதிமன்ற அலுவல் தொடர்பான வழக்கமான கடிதப் போக்குவரத்தில், இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோகோய் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் தன் குரலில் பேசியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தமது பெயரில் யாரேனும் பேசினால் அந்த அழைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: