×

இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும் 'போர்ட் ரூம்'என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டும்: அண்ணா பல்கலை உத்தரவு

சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும், போர்ட் ரூம் என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இன்ஜினியரிங்யின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. அங்கீகாரம் பெறும் கல்லுாரிகள், தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துடன், அண்ணா பல்கலை பாட திட்டத்தில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சரியாக பேராசிரியர்கள் இல்லாமை, பாடங்களை முறையாக நடத்தாதது, வசூலித்த தேர்வு கட்டணத்தை பல்கலைக்கு செலுத்தாதது என கல்லுாரிகள் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செயல்படும், போர்ட் ரூம் மாணவர்களை மிரள வைத்துள்ளது. அதாவது சில இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கேன்டீனில் உணவு பொருளுக்கு அதிக விலை வைப்பது, தேர்வு எழுத கூடுதல் கட்டணம் கேட்பது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரேக்கேஜ் என்ற பெயரில் திடீர் அபராதம் விதிப்பது போன்ற வசூல் வேட்டைகள் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அபராதத்துக்கு எதிராகவும் விடுதிகளில் வசதி குறைவு பற்றியும் கேள்வி எழுப்பும் மாணவர்கள் கல்லுாரிகளின் போர்ட் ரூமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு சில பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் வெளியாட்களும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிரட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பயந்து பல மாணவர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் விடும் நிலையும் உள்ளது. சமீபத்தில், போர்ட் ரூம் விவகாரத்தை கிளப்பிய மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதுக்கி வைத்து தேர்வுக்கு அனுமதிக்காமல் கல்லுாரிகள் மிட்டியுள்ளன. இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூம் என்ற அறையில் பூட்டி வைத்து வெளியே தெரியாமல் உதை விழும். அதை போலவே இன்ஜினியரிங் கல்லுாரிகளில் போர்ட் ரூம் உள்ளது. எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது என கூறினர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போர்ட் ரூம் குறித்து கல்லுாரிகளை ரகசியமாக கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரத்தை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பவும் என அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Secretariat ,Mystery Room , Secretariat,conduct secret surveillance,'Room Room',inspect engineering students, Anna University
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...