மனைப்பிரிவுக்கு அனுமதி தர ரூ15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

கும்பகோணம்: மனைப்பிரிவுக்கு அனுமதி தர ரூ15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையருக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஆண்டு தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனது நிலத்தை மனைப்பிரிவாக மாற்ற பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருந்த சென்னை ராயப்பேட்டை ஹால்ஸ்ரோட்டை சேர்ந்த தலீப் ஷெரீப் என்பவரிடம் 2003 ஏப்ரல் 1ல் விண்ணப்பித்தார். திருச்சி நகர ஊரமைப்பு துணை இயக்குனர் 2003 அக்டோபர் 15ல் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், நகராட்சி ஆணையர் ரூ25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி கடிதம் தரப்படும் என கூறியுள்ளார். அதன்படி இளங்கோவன் 2003 அக்டோபர் 30ம் தேதி முன்பணமாக ரூ10 ஆயிரம் கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

மீதி ரூ15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துவிட்டு அன்று மாலை ஆணையர் தலீப் ஷெரீப்பிடம் இளங்கோவன் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார், தலீப் ஷெரீப்பை கைது செய்தனர். இந்த வழக்கை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் பிள்ளை விசாரித்து,  தலீப் ஷெரீப்புக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். பணியில் இருந்து ஓய்வு ெபற்ற தலீப் ஷெரீப்புக்கு தற்போது 73 வயதாகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: