×

பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் வசூல் ரொக்கம் பெறும் நடைமுறைக்கு தடை: பத்திர பதிவு துறையில் நேற்று முதல் அமல்

சென்னை: தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் கருவி நிறுவப்பட்டது. தமிழகம் முழுவதும் 575 அலுவலகங்களுக்கு தலா 1 வீதம் பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் பிப்ரவரி 18ம் தேதி முதல் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் டெபிட், கிரெடிட் கார்டுகளை பெற்று பிஓஎஸ் கருவி மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. மேலும், அந்த கட்டணம் வசூலித்ததற்கான ரசீதை சார்பதிவாளர்களிடம் இருந்து பொதுமக்கள் பெற்று கொண்டனர். ரூ1000 வரை கட்டணம் மட்டும் இந்த பிஓஎஸ் கருவி மூலம் வசூலிக்கப்பட்டது. அதற்கு மேல் ரூ5 ஆயிரம் வரை வரைவோலையாக பெறப்பட்டது. ரூ5ஆயிரத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நடைமுறை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், ஆவணம் மற்றும் திருமண பதிவு செய்ய வருபவர்களை சிசிடிவி மூலம் படம் பிடித்து சிடியில் பதிவு செய்யும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் ரூ50 கட்டணம் ெசலுத்தும் பொதுமக்கள் தவறாமல் சிடியை பெற்று செல்ல வேண்டும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : POS Tool, Securities Registration Department
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...