கோபி ஆர்டிஓ ஆபீசில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது

கோபி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் ராமபையலுரை சேர்ந்த  சக்திவேல், அவரது நண்பர் பழனிச்சாமி ஆகியோர், கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கருணாநிதி ஆகியோருடைய நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டு உள்ளனர். அந்த நிலத்தை மறுஅளவீடு செய்து தருமாறு கோபி கோட்டாட்சியரிடம் மனு செய்திருந்தனர். இதற்காக அலுவலக உதவியாளர் ரங்கசாமி ரூ65 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சக்திவேல் புகாரின்படி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை அவர் கொடுத்தபோது ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு சோதனை நடத்தினர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: