மாணவன் தற்கொலை

வேளச்சேரி: பள்ளிக்கரணை, கக்கன்ஜி தெருவை சேர்ந்த வைரமுத்து மகன் பத்மபிரியன் (13). மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இவனது காலில் ஆணி குத்தியதால் காயம்  ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில், அதே தெருவில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிறுவன் அடிக்கடி சென்றதால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டான். வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.   

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: