புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தமிழகம் முழுவதும் பேரணி

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ப்ரண்ட் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புரசைவாக்கத்தில் உள்ள மாநில  தலைமையகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முஹம்மது நாஸிம், மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், கேம்பஸ்  ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எல்.அப்துல் ரஹ்மான், ஜவஹர் கிரேசி உரிமையாளர் அப்துல்லாஹ் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் கொடிஏற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஜாக் தொகுத்து வழங்கினார்.  தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.  முன்னதாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: