லாட்டரி ஜிஎஸ்டி: நாளை முடிவு

புதுடெல்லி: மாநில அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஒரே ஜிஎஸ்டியை விதிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவார் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க இந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக நாளை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: