மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ28,000 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ28,000 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ரிசர்வ் வங்கி வாரிய குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது: ரிசர்வ் வங்கி வட்டி குறைதத பிறகு, வங்கிகளும் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். இதுதொடர்பாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் வரும் 21ம் தேதி ஆலோசனை நடத்த  இருக்கிறேன் என்றார். இந்த மாதம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில வங்கிகள் வெறும் 0.05 சதவீத வட்டி மட்டுமே குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு இடைக்கால டிவிடெண்டாக ரூ28,000 வழங்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்த்தது. இதுபற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

இதன்பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், கடந்த டிசம்பர் உடன் முடிந்த அரையாண்டில் இடைக்கால டிவிடெண்டாக உபரி நிதி ரூ28,000 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கி ஜூலை - ஜூன் நிதியாண்டை கடைப்பிடிக்கிறது. நடப்பு 2018-19 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. முந்தைய ஆண்டில் இடைக்கால டிவிடெண்ட் ரூ10,000 கோடியை சேர்த்து ரூ50,000 கோடி வழங்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு, பரோடா வங்கிகளுடன் விஜயா, தேனா வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதுகுறித்து குறிப்பிட்ட அருண்ஜெட்லி, குறைந்த எண்ணிக்கையிலான பெரிய, வலுவான வங்கிகள்  இந்தியாவுக்கு தேவை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: