ரிசர்வ் வங்கிக்கு தகவல் ஆணையம் கண்டனம்

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக முடிவு செய்யப்பட்ட ரிசர்வ் வங்கி கூட்ட விவரங்களை வழங்க சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். ஆனால் ரிசர்வ் வங்கி தகவல் தர மறுத்து விட்டது இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்திடம் அவர் புகார் தெரிவித்தார். தகவல் ஆணையர் உத்தரவிட்டும் ரிசர்வ் வங்கி விளக்கம் தரவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் சட்டத்தை ரிசர்வ் வங்கி உதாசீனப்படுத்துவதாக கூறி, இந்த செயல்பாட்டுக்காக ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: