உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: இடைக்கால பட்ஜெட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், கடந்த 1ம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், வக்கீல் மனோகர் லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசியலமைப்பின்படி, ஆண்டு முழு பட்ஜெட் மற்றும் செலவு கணக்கு கோரிக்கையை மட்டுமே மத்திய அரசு கொண்டு வர முடியும். எனவே, அரசியலமைப்பில் இடம் பெறாத இடைக்கால பட்ஜெட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறி இருந்தார்.

இந்த மனுவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு  நேற்று விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதே போல, கடந்த ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மீடியாக்களுக்கு விடுத்த அறிக்கையில் ‘தலித்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்; அதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பிரிவினர் என குறிப்பிடும்படி கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த மனுவையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: