ஆற்றுகால் கோயிலில் நாளை பொங்கல் விழா

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இவ்வருட  பொங்கல் திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான நாளை உலகப் பிரசித்தி  பெற்ற பொங்கல் வழிபாடு  நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.20 மணியளவில் கோயில்  வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் கோயில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன்  பட்டதிரிப்பாடு மற்றும் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தீ  பற்ற  வைப்பார்கள். இதன் பின்னர் கோயிலின் பல கி.மீ. சுற்றளவில்  குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் தங்களது பொங்கல் அடுப்புகளில் தீ  மூட்ட தொடங்குவர்கள். இதற்காக லட்சக்கணக்கானோர் குவிந்து  வருகின்றனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சீயோன் ஆலய முப்பெரும் விழா