பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கல்லூரி பேராசிரியை கைது

கவுகாத்தி: அசாமில் பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்ட பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் குறித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கல்லூரில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பாப்ரி பானர்ஜி என்ற பேராசிரியை முகநூலில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்திய ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தன. இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்கு பதிந்த போலீசார் பாப்ரி பானர்ஜியை கைது செய்துள்ளனர். மேலும் கல்லூரியில் இருந்தும் பாப்ரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: