மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

மாலி: மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன் கைது செய்யப்பட்டார்.   மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன்.  இவர் தேர்தல் செலவுகளுக்காக சுமார் 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு முறைகேடாக நிதி திரட்டியதாக புகார் எழுந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  இது  தொடர்பாக யமீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையின் ஆவணங்களின் அடிப்படையில் யமீனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: