மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: மத்திய அரசுக்கு இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் வாரியக்கூட்டம் இன்று காலை நடந்தது.

இதில் மத்திய அரசு இடைக்கால உபரித்தொகை வழங்கிட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் இடைக்கால உபரித்தொகையாக ரூ.28 ஆயிரம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி உபரித் தொகையை கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் 2017 - 18-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் உபரித் தொகையை முன்னதாக ரிசர்வ் வங்கி வழங்கியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியிடம் ரூ. 28 ஆயிரம் கோடியை இடைக்கால உபரித் தொகையாக கொடுக்க மத்திய அரசு வலியுறுத்தியது. அதனை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கியின் வாரியக்கூட்டம் இன்று காலை நடந்தது.

அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு ரூ. 28 ஆயிரம் கோடி உபரித் தொகையை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது இடைக்கால உபரித் தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கையில காசு வரலே... கணக்குல கழிஞ்சு...