வேலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தையை காதலனுடன் சேர்ந்து தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி உமர் நகரைச் சேர்ந்த நளினி - சிவக்குமார் தம்பதி மூன்று குழந்தைகளுடன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். வேலை செய்யும் இடத்தில் நளினிக்கு முரளி என்பவனுடன் தவறான தொடர்பு ஏற்பட்டது. மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு கடந்த 20 நாட்களுக்கு முன் வாணியம்பாடி வந்து இருவரும் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertising
Advertising

கடந்த 15ஆம் தேதி இரவு இரண்டு குழந்தைகளில் ஒன்றரை வயதான ரித்திகா என்ற குழந்தை மர்மான முறையில் உயிரிழந்தது. இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முரளி, நளினியிடம் நடத்திய தீவிர விசாரணையில் தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையைக் கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் திட்டமிட்டு கொலை செய்தல் பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: