அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?... நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்? என்று ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணையின் போது அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டிக்காக செலவிடப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர், மற்றவர் இடையே இடைவெளி அதிகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

அதனை அடுத்து தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக யூனியன்கள் செயல்படுவதால், நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளதாகவும், யூனியன்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய பிடித்தத்திற்கு பதில் விடுமுறைக் காலத்தை கழித்துக்கொள்ளலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆசிரியர்கள் இடமாறுதலை ரத்து செய்வது குறித்து ஜாக்டோ- ஜியோ தரப்பில் இடைமனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கட்சி பாகுபாடின்றி பணியாற்றுவேன்