டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி நடத்திவரும் தர்ணா போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜகவால் நியமிக்கப்பட்ட கிரண்பேடி மாநில நலன்களை தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சரவை தீர்மானங்களை செயல்படுத்தவிடாமல் கிரண்பேடி தடுப்பதாக  கெஜ்ரிவால் சாடினார். துணைநிலை ஆளுநர்களால் யூனியன் பிரதேசங்களான டெல்லியும் புதுச்சேரியும் பாதிப்புக்குள்ளாகின்றன. டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.

மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியில் மாநில முதல்வர்கள் தர்ணா நடத்தும் நிலை உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். கிரண்பேடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் 6வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரிக்கு நேரில் சென்று நாராயணசாமி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED டெல்லியில் முதல்வர் அரவிந்த்...