அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது

அமெரிக்கா: அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்தவன் ஜான் கிரைன். சம்பவத்துன்று இவன் ஒரு கடைக்கு சென்று காபி குடித்தான். அதற்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றான். அங்கு சீக்கியர் ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குடித்த காபிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கினான். மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றி அவமதித்தார். இத்தாக்குதலில் சீக்கிய ஊழியர் காயம் அடைந்தான். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கிரைன் அங்கிருந்து ஓடிவிட்டான். மறுநாள் அவனை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது. அவரை முஸ்லிம் என கருதி தாக்கினேன் என கிரைன் கூறினான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். திருட்டு- தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூபா கவுண்டி சிறையில் அவன் அடைக்கப்பட்டான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: