×

மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேருந்துகள் மீது கல்வீசிய வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்றும் இந்த வழக்குத் தொடர்பாக, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishna Reddy ,Supreme Court ,MG , Supreme Court, Balakrishna Reddy,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...