புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு

மும்பை: புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 41 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த கோர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு என்பதால் அந்நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் எந்த போட்டியிலும் விளையாடக் கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள பிசிசிஐ கிளப்பில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது. தீவிரவதாக தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்றால் அதுபற்றி அவர் வெளிப்படையாக பேச வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: