கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தண்டையார்பேட்டை எண்ணெய் கசிவால் பாதிப்படைந்த  9 குடும்பங்களுக்கும் சேர்த்து ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு தண்டையார் பேட்டையில் உள்ள சில வீடுகளின் குழாய்களில் கச்சா எண்ணெய் வருவதாக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம்  உரிமையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட சோதனையில் துறைமுகத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக நிலத்திற்கு செல்லும் கச்சா எண்ணெய் குழாய்களில் இருந்து எண்ணெய் கசிந்தது தெரிய வந்தது. இதையடுத்து குழாயை அகற்றக்கோரியும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் மாசடைந்த இடங்களை மறுசீரமைப்பு செய்யும் வேலையில் மேலும் தாமதம் கூடாது. மறுசீரமைப்புப் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆகியோர் ஒன்றுகூடி ஒரு மாதத்திற்குள் மறுசீரமைப்பிற்கான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆறு மாதத்திற்குள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கும் சேர்த்து ரூ. 3லட்சம் இழப்பீடாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: